Published : 06 Jan 2022 03:54 PM
Last Updated : 06 Jan 2022 03:54 PM

மிதுனம், கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! ஜனவரி 6 முதல் 12ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)


கிரகநிலை:


ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் புத (வ), சுக் (வ), சனி - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், குரு - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.


பலன்கள்:


நல்லவர், கெட்டவர் என்று பாராமல் எல்லோரிடமும் நாசூக்காக நடந்து கொண்டு அவர்களை நன்கு பயன்படுத்தி காரிய வெற்றி பெறும் திறமையுள்ள மிதுன ராசியினரே!


நீங்கள் விவேகத்துடன் முடிவெடுப்பதில் சிறந்தவர். இந்த வாரம் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.


வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்கும். பணவரத்து தாமதப்படலாம். ஆர்டர்கள் தொடர்பாக நீங்கள் அலையும் அலைச்சல் வெற்றி தரும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

பெண்களுக்கு குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது.
மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது.

பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.
****************

கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)


கிரகநிலை:


பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் புத (வ), சுக் (வ), சனி - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், குரு - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.


பலன்கள்:


எந்த ஒரு விஷயத்தையும் அது எப்படி நடக்கும் சாதகமா பாதகமா என்று முன்கூட்டியே யூகித்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ளும் திறமையுடைய கடக ராசியினரே!

நீங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மதிப்பளிப்பவர். இந்த வாரம் வீண் செலவுகள் குறையும். எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடும் செலவும் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்துடன் கனிவை அனுசரிப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு ஏற்படலாம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும்.

பரிகாரம்: திங்கள்கிழமை அன்று ஆதிபராசக்தியை வழிபடுவது காரியத் தடை களை நீக்கும். மன அமைதியைத் தரும்.
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x