Published : 13 Nov 2021 12:54 PM
Last Updated : 13 Nov 2021 12:54 PM

குருப்பெயர்ச்சி பலன்கள் ;  பூராடம் நட்சத்திர அன்பர்களே; பழைய கடன்கள் தீரும்; புதிய வேலை; தேக ஆரோக்கியம்; எதிலும் முன்னேற்றம்! 


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூராடம் :

கிரகநிலை:

குரு பகவான் உங்களின் நான்காம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

மற்றவர்கள் மத்தியில் கௌரவத்துடன் வாழ ஆசைப்படும் பூராட நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சி எதையும் யோசனையுடன் செயல்படுவதற்கு அறிவுறுத்தும். நல்ல புத்திக் கூர்மை ஏற்படுவதற்கு குருபகவான் வழிவகைகள் செய்வார். குடும்பத்தில் பழைய கடன்கள் அடைக்கப் பெறுவீர்கள். எதிரிகளின் தொல்லை அறவே நீங்கும். அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். உங்கள் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

தொழிலுக்குத் தேவையான நிதி உதவிகள் தாராளமாக கிடைக்கும். உங்கள் உடல்நிலையால் சில காரியங்களைத் தள்ளிப்போட்டு வந்த நிலை மாறி சுறுசுறுப்புடன் செயல்பட்டு அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழிலாளர் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உடல் ஆரோக்கிய குறைவு அல்லது சில பிரச்சினைகளால் வேலைக்குச் செல்லாமல் இருந்தவர்கள் இப்போது வேலைக்குச் செல்வார்கள். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புகள் வரலாம்.

பெண்களுக்கு உங்களை அவமதித்தவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். மன்னிப்பும் கேட்பார்கள். ஓய்வில்லாமல் உழைக்க நேரிடலாம்.

மாணவர்களுக்கு கல்விக்காக வாங்கிய கடன் அடையும். உங்களின் கிரகிக்கும் தன்மை அதிகரிக்கும்.

அரசியல்துறையினருக்கு விரயங்கள் குறையும். ஆன்மிக வேலைகளில் நாட்டம் அதிகரிக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடப்பதன் மூலம் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் அதிகம் இருந்தாலும் அவை அனைத்தும் உங்களின் முன்னேற்றத்திற்காகவே இருக்கும்..

பரிகாரம்:

மஹாலக்ஷ்மி வழிபாட்டினால் சாதனைகள் படைக்க முடியும்.

மதிப்பெண்கள்: 72% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x