குருப்பெயர்ச்சி பலன்கள் ; ரோகிணி நட்சத்திர அன்பர்களே! நிம்மதி; லாபம்; கெளரவம்; பதவி உயர்வு; வாழ்வில் உயர்வு! 

குருப்பெயர்ச்சி பலன்கள் ; ரோகிணி நட்சத்திர அன்பர்களே! நிம்மதி; லாபம்; கெளரவம்; பதவி உயர்வு; வாழ்வில் உயர்வு! 
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரோகிணி:


கிரகநிலை:


குரு பகவான் உங்களின் இருபதாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.


பலன்கள் :

மன அமைதியை விரும்பும் ரோகிணி நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியால் குடும்ப நிம்மதியும், லாபமும் அமையப் பெறப் போகிறிரீக்ள். குடும்பத்தில் இருந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்களை அவமானப் படுத்தியவர்கள் எல்லாம் உங்களை ஆச்சரியமுடன் பார்க்கும் காலமாக இது இருக்கும். அதை பயன்படுத்தி உங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள்.
தொழிலைப் பொறுத்தவரைஇதுவரை இருந்து வந்த மந்தநிலையில் இனி ஓரளவிற்கு முன்னேற்றத்தைக் காணலாம். ஆர்டருக்காக திருப்பி அனுப்பிய அனைவரும் உங்களை அழைத்து புதிய ஆர்டர்களைக் கொடுப்பார்கள்.

உத்தியோகத்தைப் பொறுத்தவரையில் சிறிது மந்த நிலை காணப்பட்டாலும்அவர்கள் பதவிஉயர்வுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகத்தில் அனைவராலும் கேளிக்கைக்கு ஆளாகிய நீங்கள் குருவின் அனுகிரகத்தால் ஓரளவிற்கு மதிப்பு, மரியாதையுடன் நடத்தப்பெறுவீர்கள்.
பெண்களில் சிலருக்கு திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். திருமண வாழ்வில் விவகாரத்து வரை சென்றவர்கள் கூட குருவின் கடாட்சத்தால் பிரச்சினைகளை தீர்த்து சேர வாய்ப்புள்ளது.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த வந்த மந்த நிலை மாறி ஓரளவிற்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

அரசியல்துறையினருக்கு கட்சிப் பணியில் தொய்வு வரலாம். அதிரடி முடிவுகள் கட்சியில் எடுக்கப்படும்.

கலைத்துறையினருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும். அழகு கூடி காட்சியளிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் வந்து உங்களை மெருகேற்றும்.

பரிகாரம்:

கிருஷ்ணரை பூஜித்தால் மாற்றம் வரும்.

மதிப்பெண்கள்: 70% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in