Published : 30 Sep 2021 03:37 PM
Last Updated : 30 Sep 2021 03:37 PM

கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; செப்டம்பர் 30 முதல் அக்டோபர்  6ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி, குரு (வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

வாழ்க்கையில் எதையும் நன்கு அனுபவித்து ரசிக்கும் கடக ராசியினரே!

இந்த வாரம் உங்களுக்கு எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். முயற்சிகள் சாதகமான பலன் பெறும். ஆனால் வாகனங்களில் செல்லும் போதும் எந்திரங்களை கையாளும்போதும் தீ, மின்சாரம் ஆகியவற்றிலும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
வீட்டில் சுபகாரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் சுகமும், நிம்மதியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பார்ட்னருடன் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து வியாபாரம் வளர்ச்சி பெறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சாதாரணமான பேச்சே வீண் விரோதத்தை ஏற்படுத்தக்கூடிய நிலை இருக்கும். பெண்களுக்கு மன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைநீங்கும்.

பரிகாரம்: அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
********************************************************************************************************************************


சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
தனவாக்கு ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

எவ்வளவு சிக்கலான ஒரு விஷயத்திலும் குழப்பம் இல்லாமல் சட்டென்று ஒரு முடிவு எடுக்கும் சிம்ம ராசியினரே!

இந்த வாரம் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து நல்ல நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு செலவு அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகலாம். கடன் தொல்லை ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெண்களுக்கு திருமணம் கைகூடும். மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.

பரிகாரம்: நந்தீஸ்வரரை வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
********************************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)


கிரகநிலை:
ராசியில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி, குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

எப்பொழுதும் சுறுசுறுப்புடன் காணப்படும் கன்னி ராசியினரே!

இந்த வாரம் எதிர்பாராத சில நன்மைகள் ஏற்படும். திடீர் பணத்தேவை உண்டாகலாம்.

முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். வீண் விவாதங்களால் அடுத்தவர்களுடன் தகராறு உண்டாகலாம். முயற்சிகளில் தடை உண்டாகலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும். முக்கிய நபர்களின் நட்பு உண்டாகும்.

வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். பெண்களுக்கு இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் கவனமுடன் படிப்பது நல்லது. வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்: பள்ளிகொண்ட பெருமாளை சேவிப்பது பாவங்களைப் போக்கும். சிக்கலான பிரச்சினைகள் தீரும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x