Published : 24 Aug 2021 04:25 PM
Last Updated : 24 Aug 2021 04:25 PM
- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
பூரட்டாதி -
நன்மைகள் பலவாறாக நடக்கும் வாரம். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர சகோதரிகள் பிரச்சினைகளுக்கு உதவி செய்ய முன்வருவர். திருமணமாகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயமாகும்.
புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உறுதியாகும். உத்தியோகத்தில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. இடமாற்றம் அல்லது பதவி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தொழில் வளர்ச்சி சீராக இருக்கும் இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். கலைஞர்களுக்கு மிகச் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இந்த வாரம் -
திங்கள் -
குடும்பத்தில் திருமணம் தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்படும். உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகப் பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.
செவ்வாய் -
எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண உதவி கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
புதன் -
பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அலுவலக ஊழியர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
வியாழன் -
நினைத்தது நிறைவேறும் நாள் தொழில், வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தாரால் எதிர்பாராத உதவிகள் பெற்று மனமகிழ்ச்சி பெறுவீர்கள்.
வெள்ளி -
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும்.
சனி -
பராமரிப்புச் செலவுகள் கூடும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். இட மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள்.
ஞாயிறு -
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முக்கியமான உதவி கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீமகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் கேளுங்கள். நன்மைகள் பெருகும்.
***************
உத்திரட்டாதி -
நினைத்தது நிறைவேறும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
பணவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். மருத்துவச் செலவுகள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம்.
அலுவலகப் பணிகளில் அதிக பணிச்சுமை கூடினாலும் இயல்பாகவே இருக்கும். சக ஊழியர்களுடன் இணைந்து முக்கியமான பணிகளை முடித்து கொடுப்பீர்கள்.
வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய வியாபார வாய்ப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றத்தைக் காணலாம். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.
வேலையை விட்டு விலகிச் சென்ற ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பி வருவார்கள். பெண்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். சொத்து சேரும் வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினைகள் தீரும்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம்-
திங்கள் -
எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.
செவ்வாய் -
மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றும். உடல் நலத்தில் சிறிய அளவிலான பாதிப்புகள் இருக்கும். அது தொடர்பான மருத்துவச் செலவுகளும் ஏற்படும். ஒருவித மந்த நிலை இருக்கும்.
புதன் -
நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்த செயல்கள் அனைத்தும் இன்று முழுமை பெறும். வேலையில் சுறுசுறுப்பாக பணியாற்றி உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும்.
வியாழன் -
நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். பணச்செலவு அதிகம் இருக்கும். செலவுகளை கட்டுக்குள் வைக்கவேண்டும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல் தோன்றி மறையும். தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்.
வெள்ளி -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்த படி இருக்கும். சொத்து வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
சனி -
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகளை இன்று எளிதாகச் செய்து முடிப்பீர்கள்.
ஞாயிறு -
எதிர்பாராத பண வரவு உண்டாகும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் இன்று நல்ல முடிவு எட்டப்படும். நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலை தொடர்பான செய்தி மனதிற்கு உற்சாகத்தை தரும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மனை வணங்குங்கள். பிரத்தியங்கரா மூலமந்திரத்தை சொல்லி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும்.
***************
ரேவதி -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
பணப்புழக்கம் சரளமாக இருக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் தீரும். உற்சாகமான மனநிலைக்கு மாறுவீர்கள். இதுவரை தொழில் செய்யாதவர்களுக்கு கூட இப்போது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்துகளை விற்பதில் ஏற்பட்ட தடை தாமதங்கள் விலகி இப்போது சொத்து விற்பனையாகும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் வியாபார வாய்ப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவது, வியாபார நிறுவனங்களை விரிவுபடுத்துவது, கிளைகள் ஆரம்பிப்பது போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் உருவாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
குடும்ப விஷயங்கள் இயல்பாக இருக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் தாமதமாகும். குடும்பத்தில் ஒரு சில மன வருத்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும். சிக்கனமாக இருப்பது நல்லது.
செவ்வாய் -
வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.
புதன் -
தேவையான உதவிகள் அனைத்தும் தானாக தேடிவரும். பணவரவு தாராளமாக இருக்கும். நண்பர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.
வியாழன் -
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். எந்த விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உருவாகும். அது தொடர்பாக மருத்துவச் செலவு ஏற்படும்.
வெள்ளி -
அலுவலகப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுபமாக முடிவாகும். வியாபார விஷயமாக ஏற்படும் சந்திப்புகள் மனநிறைவைத் தரும்.
சனி -
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபார இடங்களில் மாற்றங்கள் செய்ய முற்படுவீர்கள்.
ஞாயிறு -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்ப்புகள் விலகிப் போகும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீநரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
**********
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment