Published : 28 May 2021 11:44 AM
Last Updated : 28 May 2021 11:44 AM

கடக ராசி அன்பர்களே! எதிர்ப்பு அகலும்; தடை அகலும்; ஆரோக்கியத்தில் கவனம்; ஜூன் மாத பலன்கள்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் - உத்தராயனம் - வஸந்த ரிது - வைகாசி மாதம் 17ம் தேதி பின்னிரவு 18ம் தேதி முன்னிரவு - அன்றைய தினசுத்தி அறிவது க்ருஷ்ணபக்ஷ சஷ்டி - அவிட்டம் நட்சத்திரம் - மாஹேந்திர நாமயோகம் - கரஜி கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12.00 மணிக்கு கும்ப லக்னத்தில் ஜூன் மாதம் பிறக்கிறது.

ஜூன் மாதம் பிறக்கும் போது இருக்கும் கிரகநிலை:
லக்னம் - அவிட்டம் 4ம் பாதம் - செவ்வாய் சாரம்
சூர்யன் - ரோகிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
சந்திரன் - அவிட்டம் 2ம் பாதம் - செவ்வாய் சாரம்
செவ்வாய் - புனர்பூசம் 3ம் பாதம் - குரு சாரம்
புதன்(வ) - ரோகிணி 1ம் பாதம் - சந்திரன் சாரம்
குரு(அசா) - சதயம் 1ம் பாதம் - ராகு சாரம்
சுக்கிரன் - ம்ருகசீர்ஷம் 3ம் பாதம் - செவ்வாய் சாரம்
சனி (வ) - திருவோணம் 1ம் பாதம் - சந்திரன் சாரம்
ராகு - ரோகிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
கேது - அனுஷம் 4ம் பாதம் - சனி சாரம்


************************

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
கிரகநிலை:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி(வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு(அசா) - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - விரய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரக நிலை அமைந்திருக்கிறது.
இம்மாதம் 03ம் தேதி - வியாழக்கிழமை அன்று செவ்வாய் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 10ம் தேதி - வியாழக்கிழமை அன்று புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 15ம் தேதி - செவ்வாய்கிழமை அன்று சூர்யன் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 23ம் தேதி - புதன்கிழமை அன்று சுக்கிரன் ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள் :
இந்த மாதம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கப் பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியத் தடை அகலும். எந்திரங்கள் மற்றும் தீ ஆகியவற்றைக் கையாளும்போது கவனம் தேவை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.
பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.

மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.

புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதுர்யம் அதிகரிக்கும்.

பூசம்:
இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சுத் திறமை அதிகரிக்கும். எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலில் சூடு ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.

ஆயில்யம்:
இந்த மாதம் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப் போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத் திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதைக் கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.

பரிகாரம்: துர்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும். தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்;
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24
**********************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon