Published : 28 May 2021 10:50 AM
Last Updated : 28 May 2021 10:50 AM

ரிஷப ராசி அன்பர்களே! பண உதவி; குடும்பத்தில் நிம்மதி; நிதானம் தேவை; ஜூன் மாத பலன்கள்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் - உத்தராயனம் - வஸந்த ரிது - வைகாசி மாதம் 17ம் தேதி பின்னிரவு 18ம் தேதி முன்னிரவு - அன்றைய தினசுத்தி அறிவது க்ருஷ்ணபக்ஷ சஷ்டி - அவிட்டம் நட்சத்திரம் - மாஹேந்திர நாமயோகம் - கரஜி கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12.00 மணிக்கு கும்ப லக்னத்தில் ஜூன் மாதம் பிறக்கிறது.

ஜூன் மாதம் பிறக்கும் போது இருக்கும் கிரகநிலை:
லக்னம் - அவிட்டம் 4ம் பாதம் - செவ்வாய் சாரம்
சூர்யன் - ரோகிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
சந்திரன் - அவிட்டம் 2ம் பாதம் - செவ்வாய் சாரம்
செவ்வாய் - புனர்பூசம் 3ம் பாதம் - குரு சாரம்
புதன்(வ) - ரோகிணி 1ம் பாதம் - சந்திரன் சாரம்
குரு(அசா) - சதயம் 1ம் பாதம் - ராகு சாரம்
சுக்கிரன் - ம்ருகசீர்ஷம் 3ம் பாதம் - செவ்வாய் சாரம்
சனி (வ) - திருவோணம் 1ம் பாதம் - சந்திரன் சாரம்
ராகு - ரோகிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
கேது - அனுஷம் 4ம் பாதம் - சனி சாரம்


************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:
ராசியில் சூர்யன், புதன்(வ), ராகு - தனவாக்கு ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் ஸ்தானத்தில் குரு(அசா) என கிரக நிலை அமைந்திருக்கிறது.
இம்மாதம் 3ம் தேதி - வியாழக்கிழமை அன்று செவ்வாய் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 10ம் தேதி - வியாழக்கிழமை அன்று புதன் வகர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 15ம் தேதி - செவ்வாய்கிழமை அன்று சூர்யன் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 23ம் தேதி - புதன்கிழமை அன்று சுக்கிரன் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

இந்த மாதம் மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளைச் செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடை பிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையைக் கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியைத் தரும். கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துகள் கைக்கு வந்து சேரும்.

பெண்களுக்கு உங்களது ஆலோசனையைக் கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். செலவுகள் குறையும். உடன் பனி புரிவோர் உங்களது ஆலோசனைகளைக் கேட்பார்கள்.

அரசியல் துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்பச் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம்.

ரோகிணி:
இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும்.

மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் வீண் பிரச்சினையால் மனக்குழப்பம் ஏற்படலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

பரிகாரம்: மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x