Published : 01 Feb 2021 04:47 PM
Last Updated : 01 Feb 2021 04:47 PM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), குரு, சுக்கிரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
10ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி சூரியன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி செவ்வாய் சப்தம களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27ம் தேதி சுக்கிரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த மாதம் எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையைச் சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணக்கோளாறு போன்ற ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும்போது கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். லாபாதிபதி புதனும் ராசிநாதன் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். லாபத்திற்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும்.
கலைத்துறையினருக்கு பணவரத்து மனமகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். ராசியில் சஞ்சரிக்கும் சூரியனால் எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரம் வாக்கு வன்மையைத் தரும்.
அரசியல்துறையினருக்கு நீங்கள் ஏற்பாடு செய்த காரியங்கள் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். வேலை பளு, வீண் அலைச்சல் குறையும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன்களைத் தரும்.
விசாகம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.
அனுஷம்:
இந்த மாதம் பயணங்களின் போது உடைமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவீர்கள்.
கேட்டை:
இந்த மாதம் மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதைத் தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். எந்தக் காரியத்தையும் ஆலோசித்துச் செய்வது நல்லது. ஆன்மிகச் சிந்தனைகள் மனதிற்கு நிம்மதியைத் தரும். மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள்.
பரிகாரம்: மாரியம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வேப்பிலை அர்ப்பணித்து தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
*****************************************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment