Published : 10 Nov 2020 01:35 PM
Last Updated : 10 Nov 2020 01:35 PM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சித்திரை:
குரு பகவான் உங்களின் எட்டாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
வெளுத்தது எல்லாம் பால் என்று நினைக்கும் வெள்ளை உள்ளம் கொண்ட சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
இந்த குருப்பெயர்ச்சியில் காரியத் தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சினைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும்.
வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.
உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.
பெண்களுக்குத் திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு காரியத் தடைகள் நீங்கும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும்.
பரிகாரம்: நந்திகேஸ்வரர் வழிபாடு தடைகளைத் தீர்க்கும்.
மதிப்பெண்கள்: 69% நல்லபலன்கள் ஏற்படும்.
******************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT