Published : 29 Oct 2020 02:30 PM
Last Updated : 29 Oct 2020 02:30 PM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுகஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
துணிச்சலாக எதையும் செய்து வெற்றி பெறும் சிம்ம ராசியினரே!
இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் சஞ்சாரத்தால் வீண் அலைச்சல் காரியத் தடை ஆகியவை அகலும். சுக்கிரனால் தடை நீங்கி காரியங்கள் நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உடல் சோர்வும், மனக் குழப்பமும் நீங்கும். செலவு கட்டுக்குள் இருக்கும்.
தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையைத் தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும்.
குடும்பாதிபதி புதனின் சஞ்சாரத்தின் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசுவது நல்லது. குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் கூறி ஆலோசனைக் கேட்பதைத் தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது.
பெண்களுக்கு உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். மதிப்பும் மரியாதையும் கூடும்.
கலைத்துறையினருக்கு வாகனங்களை உபயோகப்படுத்தும்போது கவனம் தேவை. பிரச்சினைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளைச் செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரியத் தடங்கல்கள் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும்.
அரசியல்துறையினருக்கு காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கவனமாகச் செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும்.
மகம்:
இந்த மாதம் அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடையத் தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும். காரியத்தடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.
பூரம்:
இந்த மாதம் வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரப் போட்டிகள் குறையும். எல்லாத் துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன்கள் தரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.
உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தைத் திறமையாக செய்து முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டுப் போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
~~~~~~~~~~~~~~~~~~~
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT