Published : 24 Aug 2020 09:43 PM
Last Updated : 24 Aug 2020 09:43 PM
ஆவணி மாதம் 16ம் நாள், செப்டம்பர் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 2.16 மணிக்கு ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். இதுவே ராகு - கேது பெயர்ச்சி எனப்படுகிறது.
இந்த ராகு - கேது பெயர்ச்சியில், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் என்று எட்டு நட்சத்திரங்களைத் தெரிவித்திருக்கிறார்கள் ஜோதிட அறிஞர்கள்.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய எட்டு நட்சத்திரங்கள், ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்யும் நட்சத்திரங்கள்.
மேஷ ராசிக்காரர்கள், ரிஷப ராசிக்காரர்கள், மிதுன ராசிக்காரர்கள், கடக ராசிக்காரர்கள், துலாம் ராசிக்காரர்கள், விருச்சிக ராசிக்காரர்கள், தனுசு ராசிக்காரர்கள், மகர ராசிக்காரர்கள் முதலானவர்கள், இந்த ராகு - கேது பெயர்ச்சி நாளில், ராகு பகவானையும் கேது பகவானையும் வழிபடுங்கள்.
ராகு பகவான் திருத்தலம், கேது பகவான் திருத்தலம், முக்கியமாக திருப்பாம்புரம் திருத்தலம் முதலான தலங்களில் அர்ச்சனை செய்துகொள்ளுங்கள். முடியும் போது, இந்தத் தலங்களுக்குச் சென்று வழிபடுங்கள்.
முக்கியமாக,வீட்டுக்கு அருகில் இருக்கும் புற்று கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். பொதுவாகவே, புற்றுக் கோயில் என்பது வெட்டவெளியில் இருக்கும். அப்படியான கோயிலுக்குச் சென்று, புற்றுக்கு மஞ்சள் தூவுங்கள். மலர் தூவுங்கள். பால் வார்த்து வேண்டிக்கொள்ளுங்கள்.
சர்ப்ப தோஷம் முதலானவை நீங்கும். கால சர்ப்ப தோஷம் நீங்கி, கல்யாணத் தடைகள் அகலும். வாழ்வில் இதுவரை இருந்த காரியத் தடைகள் அனைத்தும் விலகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT