Published : 02 Aug 2020 06:55 AM
Last Updated : 02 Aug 2020 06:55 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு பல வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. ஆடை, ஆபரணங்கள் சேரும்

ரிஷபம்: எதிலும் கவனமுடன் செயல்படுங்கள். மனஉளைச்சல் அதிகரிக்கும். மாலையில் கலகலப்பான சூழல் உருவாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

மிதுனம்: மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும். தாயார் ஆதரித்து பேசுவார். காரியத்திலும் பேச்சிலும் நிதானம் தேவை.

கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

சிம்மம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

கன்னி: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சாதுர்யமாக செயல்பட்டு முக்கிய காரியங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள்.

துலாம்:: அதிகம் உழைக்க வேண்டி வரும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயருடன் வீண் விவாதம் வந்து போகும். சொத்து தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள்.

விருச்சிகம்: உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்ப விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

தனுசு: எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் மாலையில் நீங்கும். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும்.

மகரம்: குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாதீர்கள்.

கும்பம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்-. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: உங்கள் அணுகுமுறையில் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x