Published : 30 Jul 2020 12:17 PM
Last Updated : 30 Jul 2020 12:17 PM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்:
தெய்வ நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் துலாம் ராசி அன்பர்களே!
இந்த வாரம். பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும்.
தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாகப் பேசுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும் பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையைச் செய்யும் முன்பும் அதிகம் யோசித்துச் செயல்படுவார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். பெண்கள் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். மாணவர்கள் திருப்தியுடன் செயல்படுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: துர்கை அம்மனை வணங்க காரிய அனுகூலம் உண்டாகும். மனக் கவலை தீரும்.
**************************
விருச்சிகம்:
பணத்திற்கு முதலிடம் அளிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த வாரம் பணவரவு திருப்தி தரும். ஆனால் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மை தரும்.
குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையில் அனுகூல பயன்கள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு சிறிது பொறாமைப்படுவார்கள்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் சிறப்புடன் இருந்தாலும் திடீர் பணத்தேவை ஏற்படலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். பெண்களுக்கு இதுவரை காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உங்களை எதிர்த்தவர்கள் உங்களை புரிந்து கொள்வது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
மாணவர்களுக்கு முன்பின் தெரியாதவர்களுடன் நட்பு தேவையில்லை.எச்சரிக்கையுடன் யாருடனும் பழகுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 3, 6, 9
பரிகாரம்: நந்தீஸ்வரரை வணங்கி வாருங்கள். எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.
*************************
தனுசு:
எதையும் தெளிவாகப் பேசும் தனுசு ராசி அன்பர்களே!
இந்த வாரம் காரியத்தடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.
தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். தொழில் வியாபாரம் மிக்க அலைச்சலைக் கொடுக்கும். தொழிலாளிகள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பீர்கள். முக்கிய முடிவுகளை சற்று தள்ளிப்போடுவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். பெண்கள் தொழிலில், உத்தியோகத்தில் மேன்மை பெறுவார்கள். நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும்.
மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்யுங்கள். துளசி சார்த்துங்கள். கவலைகள் மறையும்.
*************************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT