Published : 23 Jul 2020 10:33 AM
Last Updated : 23 Jul 2020 10:33 AM

கடகம், சிம்மம், கன்னி : வார ராசிபலன்; ஜூலை 23 முதல் 29ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

முன்னேற்றம் குறித்து எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கும் கடக ராசி அன்பர்களே.

இந்த வாரம் ஆன்மிக எண்ணங்களில் மனம் ஈடுபாடு கொள்ளும். எதிரிகள் மறைந்திருந்து கெடுதல் செய்வார்கள். கவனமுடன் இருந்தால் வெற்றி பெறலாம்.
உத்தியோகஸ்தர்கள் வரும் காலங்களில் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கப்பெற்று தங்கள் பணியில் சிறந்து விளங்குவார்கள். தொழில் ரீதியாக புதிய ஆலோசகர்கள் கிடைத்து தொழில் சிறக்க வழி காட்டுவார்கள்.

வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகைகள் எளிதாகக் கிடைக்கும்.

கலைத்துறையினர் கடன் வாங்கி செலவழிக்கும் நிலை உண்டாகும். தொழில் ரீதியாக உங்களை புறந்தள்ள நட்புடன் பழகியவர்களே முயற்சி செய்வார்கள். கடின உழைப்பை செயல்படுத்தினால் மட்டுமே முன்னேற முடியும்.

அரசியல்வாதிகள் பொதுமக்களுக்குச் செய்யவேண்டிய பணிகள் உங்களுக்கு நிறையவே காத்திருக்கிறது. மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்யுங்கள். அம்பாள் துதி பாராயணம் செய்யுங்கள். அம்பாள் ஆராதனையும் எலுமிச்சை தீப வழிபாடும் சகல யோகங்களையும் தரும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உண்மையும் உழைப்பும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டும் சிம்ம ராசி அன்பர்களே.

இந்த வாரம் உங்களின் மனக்கவலைகள் மாறிவிடும். நல்லவர்களிள் உதவி உங்கள் மனதை மகிழ்விக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் மற்றவர்களால் வேதவாக்காக ஏற்றுக்கொள்ளப்படும். அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்கள் தங்கள் பணியின் பொருட்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று வர நேரலாம்.

ஒரு பலனும் இல்லையே என்று ஏங்கிய உங்களுக்கு மனதில் புதிய உற்சாகமும் பொருளாதார வரவுகளும் எதிர்கால வாழ்க்கையை உயர்த்தும் வகையில் பலன்கள் நடக்கும்.

வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். லாபவிகிதங்களை கணக்கில் கொண்டு புதிய மூலதனததை தொழிலில் போடுவார்கள். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்திடமிருந்து தேவையான சலுகைகளைப் பெறுவார்கள். சேமிப்பு செய்து பணத்தை குடும்பத்தின் சுப செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள்.

கலைத்துறையினர் தனக்குள்ள திறமையை நன்கு வளர்த்துக்கொண்டு புதிய வாய்ப்புகளையும் நிறைந்த பொருளாதாரத்தையும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவார்கள். அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் அனுகூல செயல்பாட்டை தேவையான நேரத்தில் தடையின்றிப் பெறுவார்கள். பிறருக்கு செய்யவேண்டிய பணிகள் நடக்கும்.

மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விச் செலவுக்கு தேவையான பொருளாதாரத் தேவைகள் எளிதாகக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: சிவ வழிபாடு செய்யவும். ருத்ரம் பாராயணம் செய்வது இழந்ததையெல்லாம் வழங்கும். அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.
****************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

நல்ல செயல்கள் செய்து பொறுப்பாக பணி செய்து உரிய பலன் பெறும் கன்னி ராசி அன்பர்களே.

இந்த வாரம் வீண் செலவுகள் குறைந்து சுபகாரிய செலவுகள் நிகழும். இருப்பினும் அலைச்சலான சூழ்நிலைகள் உருவாகும். உங்கள் பேச்சும் செயலும் தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கும்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்களுக்கு பல்வேறு விரயமான செலவுகள் வரலாம். அனைவரையும் அரவணைத்து வேலை வாங்கும் புதிய சிந்தனைகள் உருவாகும். எதிரிகள் கெடுதல் முயற்சிகளை செய்வதால் சிறு சிறு இறக்கங்கள் உருவாகும்.

வியாபாரிகள் எந்த வியாபாரம் செய்பவராக இருந்தாலும் அவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்களுக்கு ஆன்மிக எண்ணங்கள் அதிகரித்து புதிய சக்தியை உருவாக்கித்தரும். சமூகத்திலும் உறவினர்களிடமும் நற்புகழ் கிடைக்கும். கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும்.

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கில் சிறிது சரிவு ஏற்படலாம். அதேவேளையில் பதவியும், பொறுப்பும் வந்து சேரும். மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள். விளையாட்டுகளில் சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும். வீட்டிலிருந்தும் ஐயப்ப வழிபாடு செய்து பிரார்த்தனை செய்யுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x