Published : 16 Jul 2020 10:19 AM
Last Updated : 16 Jul 2020 10:19 AM

மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்; (ஜூலை 16 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை) 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம்:

இந்த வாரம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும்.

பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபாரப் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.

பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு போட்டிகள் குறையும். அரசியல்துறையினருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.


அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சல்
எண்கள்: 3, 5, 6
பரிகாரம்: சனிக்கிழமை அன்று விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.
***************************

கும்பம்:

இந்த வாரம் நீண்ட நாட்களாக வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும்.

எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் இருந்த காரியத் தடங்கல்கள் நீங்கும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும்போது கவனம் தேவை. பயணத்தினால் லாபமும் பெருமையும் உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த இழுபறியான நிலை மாறும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு கவலைகள் அகலும். அரசியல்துறையினருக்கு உடைமைகளில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.


அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: நீலம், மஞ்சள்
எண்கள்: 2, 3, 6
பரிகாரம்: சனிக்கிழமை அன்று மஹாலக்ஷ்மிக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது, காரிய தடைகளைப் போக்கும். நன்மை கிடைக்கும்.
**********************

மீனம்:

இந்த வாரம் கிரக சூழ்நிலை உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது.

நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களைச் செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையைச் செய்வதாக இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.

தொழில் வியாபாரத்தில் பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும்.

பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம். கவனம் தேவை. கலைத்துறையினருக்கு உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாகக் கிடைக்கும். அரசியல்துறையினர் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.


அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: நவகிரகத்தில் குருவிற்கு மூக்கடலையை கட்டி நெய் தீபம் ஏற்றி வழிபட, செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
**********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x