Published : 16 Jul 2020 09:27 AM
Last Updated : 16 Jul 2020 09:27 AM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம்:
இந்த வாரம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள்.
சுபச் செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும்.
வாகன யோகம் உண்டாகும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். தொழில், வியாபாரம் வாக்குவன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.
உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதுர்யத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். மேலிடத்துடன் இருந்துவந்த மனக்கசப்புகள் அகலும்.
குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும்.
கலைத்துறையினருக்கு பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்துறையினருக்கு பெரியோர் நேசம் கிடைக்கும். மாணவர்களின் புத்திசாதுர்யம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்
எண்கள்: 2, 4
பரிகாரம்: திங்களன்று அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க, எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.
----------------------------------------------------
சிம்மம்:
இந்த வாரம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும்.
அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தைரியம் அதிகரிக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தரால் செலவு ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதுர்யத்தால் வேலைகளைத் திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.
குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
பெண்களுக்கு உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். கலைத்துறையினருக்கு பணவரத்து கூடும். அரசியல்துறையினருக்கு கோபத்தால் சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 6, 9
பரிகாரம்: தினமும் சிவனை திருவாசகம் சொல்லி வணங்க பிரச்சினைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.
----------------------------------------------------
கன்னி:
இந்த வாரம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.
எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும் அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
பணவரத்து இருக்கும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். பேச்சில் இனிமை அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.
பெண்களுக்கு நிதானமாகப் பேசுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு பேச்சில் அவசரம் கூடாது. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாகப் புரியும் வகையில் இருக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: பச்சை, வெள்ளை
எண்கள்: 5, 6
பரிகாரம்: புதன்கிழமை அன்று பெருமாளுக்கு பாலபிஷேகம் செய்து வணங்க, கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
---------------------------------------------------
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT