Published : 18 May 2020 08:27 AM
Last Updated : 18 May 2020 08:27 AM
மேஷம்: பிள்ளைகளின் பிடிவாத குணம் அதிகரிக்கும். எவ்வளவுதான் பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும்.
ரிஷபம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வருங்காலத்துக்கென திட்டங்கள் தீட்டுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
மிதுனம்: துணிச்சலுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பணவரவு உண்டு.
கடகம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த முக்கியத் தகவல் வரும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
சிம்மம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்.
கன்னி: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள்.
துலாம்: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை மாற்ற திட்டமிடுவீர்கள். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள்.
விருச்சிகம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும்.
தனுசு: அடிமனதில் இருந்துவந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலை முடியும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள்.
மகரம்: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க விடா முயற்சியுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.
கும்பம்: அதிரடியாக திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மூத்த சகோதரர் உதவுவார். தாயாரின் ஆதரவு உண்டு.
மீனம்: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT