Published : 06 May 2020 04:45 PM
Last Updated : 06 May 2020 04:45 PM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். தனாதிபதி செவ்வாயின் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும்.
சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதைச் செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கிச் சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள்.
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு, வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.
குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும்.
பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும்.
இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.
மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 2, 6
பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
************************************
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு நான்கில் சஞ்சாரம் செய்வதால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
எதிலும் இருந்து வந்த இழுபறியான நிலை மாறும். சாதாரணமாகப் பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களைக் கையாளும் போதும் கவனம் அவசியம். பணவரத்து கூடும்.
தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல்திறன் அதிகரிக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டுப் பேசுவது நல்லது.
பிள்ளைகள் எதிர்கால நலனுக்காகப் பாடுபட வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர்கள் குறைகளைக் காண்பார்கள்.
தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: சிவப்பு
எண்கள்: 1, 5, 9
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரியத் தடங்கல் நீங்கும்.
************************************
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
இந்த வாரம் ராசிநாதன் குரு தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஆனால் ராசியில் வக்ர கதியில் சனி மற்றும் கேது சஞ்சரிக்கிறார்கள். பணவரத்து திருப்திதரும்.
எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். ராசிக்கு ஏழில் சுக்கிரன் ராகு சஞ்சாரம் இருப்பதால் பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன்களைத் தரும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வதும், வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது.
பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.
பெண்களுக்கு : எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
மாணவர்களுக்கு : சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து சிவபெருமானை வணங்குவது நன்மையைத் தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி சிறப்புற நடக்கும்.
***************************************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT