Published : 10 Apr 2020 11:50 AM
Last Updated : 10 Apr 2020 11:50 AM

சார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் ; ஆயில்யம் நட்சத்திரப் பலன்கள்!

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


ஆயில்யம்:


கிரகமாற்றம்:
08-07-2020 அன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் உங்களின் பதின்மூன்றாம் நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் உங்களின் இருபத்தி நான்காம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு கேது பகவான் உங்களின் பத்தாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் உங்களின் பதின்மூன்றாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
27-12-2020 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் உங்களின் பதின்மூன்றாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
05-04-2021 அன்று இரவு 1.09 மணிக்கு குரு பகவான் அதிசாரம் பெற்று பதினைந்தாம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

மற்றவர்களின் நலனுக்காக தன் நலனைப் பாராமல் உழைக்கும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே!


இந்த புத்தாண்டில் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் வாக்குவாதத்தால் இருந்த பகை நீங்கும். பயணத்தில் தடங்கல், வீண் செலவு அகலும். பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும். வாகன யோகம் உண்டாகும். பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ பயமோ ஏற்படாது.


தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.


குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காகப் பாடுபட வேண்டி இருக்கும்.


பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.
கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.


அரசியல்வாதிகள் வாகனங்கள் பயன்படுத்தும்போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.


மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

+: புதிய பொறுப்புகள் கிடைக்கும்
-: சொத்து சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை

பரிகாரம்: நாகதேவதைக்கு அர்ச்சனை செய்து வணங்க காரியத் தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x