Published : 27 Mar 2020 11:19 AM
Last Updated : 27 Mar 2020 11:19 AM

மேஷம், ரிஷபம், மிதுனம் ;  ஏப்ரல் மாத பலன்கள்!


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விகாரி வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் 18ம் தேதி பின்னிரவு (19ம் தேதி முன்னிரவு) - அன்றைய தினம் தினசுத்தி அறிவது சுக்லபக்ஷ நவமி - புனர்பூச நட்சத்திரமும் - அதிகண்ட நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை (நள்ளிரவு 12.00 மணிக்கு) 2020 ஏப்ரல் மாதம் பிறக்கிறது.


ஏப்ரல் மாதம் பிறக்கும் போது இருக்கும் கிரகநிலை - வாக்கிய பஞ்சாங்கப்படி:


ரிஷப ராசியில் சுக்கிரன் - மிதுன ராசியில் சந்திரன், ராகு - தனுசு ராசியில் லக்னம், சனி, ராகு - மகர ராசியில் செவ்வாய், குரு(அ) - கும்ப ராசியில் புதன் - மீன ராசியில் சூரியன் என கிரகநிலை இருக்கிறது.


கிரக மாற்றங்கள்:
இம்மாதம் 1ம் தேதி புதன் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறுகிறார்.
இம்மாதம் 13ம் தேதி சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்.
இம்மாதம் 18ம் தேதி புதன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்.
இம்மாதம் 29ம் தேதி சனி வக்ரம் ஆரம்பம்.

கிரக நிலை பாதசாரம்:

கிரகநிலை :

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)


கடினமான காரியங்களில் அதிக முயற்சிகளுடன் வெற்றி பெறும் மேஷ ராசியினரே.


இந்த மாதம் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் இருக்கிறார். ராசியைப் பார்க்கிறார். அவரின் பார்வை மூலம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். குருவின் பார்வை ராசி மீது விழுவதால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். சுபச் செலவு உண்டாகலாம். பயணங்கள் திட்டமிட்டபடி நடக்கும்.


தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.


குடும்பத்தில் வெளிநபர்களால் இருந்த குழப்பம் நீங்கும். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.


பெண்களுக்கு : எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.


கலைத்துறையினருக்கு : தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.


அரசியல் துறையினருக்கு : தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.


மாணவர்களுக்கு : கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.

அஸ்வினி:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேறத் தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இன்பச்சுற்றுலா சென்று வருவீர்கள்

பரணி:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடந்து முடியும். பாராட்டுகளால் மன நிம்மதி கிடைக்கும்.

கார்த்திகை:
இந்த மாதம் தடைபட்ட காரியங்களில் இருந்துவந்த தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். தொழிலில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டு மறையும். அலைச்சல் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதற்கான பலனும் கிட்டும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

***************************************************************************************************


ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)


பிரச்சினைகள் தீர ஆலோசனைகள் செய்து பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் ரிஷப ராசியினரே.


இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் இருக்கிறார். நல்ல யோகமான பலன்களைப் பெறப் போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.


தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.


குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள்.


பெண்களுக்கு : காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் உற்சாகம் பிறக்கும்.


கலைத்துறையினருக்கு : தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.


அரசியல் துறையினருக்கு : தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.


மாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறையக் கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும். வெளிநாடு சம்பந்தமான படிப்புகளுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

கார்த்திகை:
இந்த மாதம் காரியத் தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சினைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நற்பலன்களே உண்டாகும்.உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.

ரோகிணி:
இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். உங்களின் புத்திசாலித் தனத்தால் சில சாதனைகளைச் செய்து முடிப்பீர்கள். புது முயற்சிகளில் பிரவேசிப்பதற்கு காலம் கணிந்துள்ளது.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் கூடும்.பாராட்டு கிடைக்கும். அதனால் மனதிருப்தி உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.


பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8
***************************************************************************************************

மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)


எந்த வாய்ப்பையும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய மிதுன ராசியினரே.


இந்த மாதம் ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது உங்களுக்கு சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதுரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். மாத இறுதியில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.


தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.


குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.


பெண்களுக்கு : மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.


அர்சியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்.


கலைத்துறையினருக்கு : எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயர வழி பிறக்கும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். வேலைப்பளு காரணமாக வெளியில் தங்க நேரலாம்.

மாணவர்களுக்கு : பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும்.

திருவாதிரை:
இந்த மாதம் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம். எனினும் உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது. உங்களின் ஆர்வமும் அக்கறையும் மற்றவரை பிரம்மிப்படைய வைக்கும்.

புனர்பூசம்:
இந்த மாதம் குடும்ப பிரச்சினை தீரும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை தரும். பணவரவு உண்டு. ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. முடிக்க வேண்டிய காரியங்களை செவ்வனே செய்வீர்கள்.அரசாங்கம் சார்ந்த உதவிகள் எளிதாக கிடைக்கும்.

பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10
***************************************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x