Published : 13 Mar 2020 09:45 AM
Last Updated : 13 Mar 2020 09:45 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். குடும்பத்துடன் இன்ப சுற்றுலா செல்வீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

மிதுனம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

கடகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும் சொத்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். தாயாரின் ஆதரவு உண்டு.

கன்னி: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்: சிக்கலான, சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டு திணற வேண்டாம். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

தனுசு: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பணவரவு உண்டு.

மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும்.

மீனம்: பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாந்து விடாதீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x