Published : 10 Mar 2020 08:31 AM
Last Updated : 10 Mar 2020 08:31 AM
மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவு செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.
மிதுனம்: எதையும் புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்கள் நிறைவேறும்.
கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
சிம்மம்: அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினரின் ஆதரவு உண்டு.
கன்னி: பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தலைவலி, உடல் அசதி ஏற்படக்கூடும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள்.
தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விஐபியுடன் திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
மகரம்: பிரச்சினைகளுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களை ஒதுக்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.
கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
மீனம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT