Published : 05 Mar 2020 09:56 AM
Last Updated : 05 Mar 2020 09:56 AM
மேஷம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீகள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதம் நீங்கும். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
ரிஷபம்: நெடுநாட்களாக மனதில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு காண்பீர்கள். வாகனச்செலவு நீங்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வீர்கள்.
மிதுனம்: மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள்.
கடகம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணம் உண்டு.
சிம்மம்: புது முயற்சிகள் வெற்றியடையும். சொத்து பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
கன்னி: சாதுர்யமாகப் பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைபட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு குறையும்.
துலாம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள்.
விருச்சிகம்: கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சிறுசிறு அவமானங்களை நினைத்து தூக்கம் குறையும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது.
தனுசு: வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினருடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள்.
மகரம்: பிரியமானவர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு.
மீனம்: திடமான முடிவுகள் எடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT