Published : 21 Feb 2020 09:08 AM
Last Updated : 21 Feb 2020 09:08 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். எடுத்த வேலையை உடனுக்குடன் முடிப்பீர்கள். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும்.

ரிஷபம்: பேச்சுத் திறமையால் சில காரியங்களை சாதிப்பீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல்நலம் சீராகும்.

மிதுனம்: ஒரே நாளில் நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டியது வரும். மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். முக்கியப் பிரச்சினைகளில் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பீர்கள்.

சிம்மம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி: உங்களின் புதிய முயற்சிக்கு உடன்பிறந்தோர் பக்கபலமாக இருப்பார்கள். அவர்களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனம் சீராகும்.

துலாம்: மனதில் நிலவிய குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்து செல்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு. பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: காரியங்களை முடிப்பதில் இருந்துவந்த தடுமாற்ற நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சோம்பல், உடல் அசதி, நீங்கும். திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

தனுசு: ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து சேமிக்கும் எண்ணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும்.

மகரம்: முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக செய்வது நல்லது. அடுத்தவர்களை குறைகூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ள முயலுங்கள். செலவினம் அதிகரிக்கும்.

கும்பம்: பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண முயற்சிப்பீர்கள். எதிர்மறை எண்ணம் பிறக்கும். ஆன்மிக பயணம் உண்டு..

மீனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வீட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x