Published : 19 Feb 2020 09:41 AM
Last Updated : 19 Feb 2020 09:41 AM
மேஷம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும்.
ரிஷபம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கடன் வாங்க வேண்டியது வரும். திடீர் பயணம் உண்டு.
மிதுனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கலைப்பொருட்கள் சேரும்.
கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டு. அரசால் அனுகூலம் ஏற்படும்.
சிம்மம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள்.
துலாம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்: சொந்தபந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
தனுசு: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிப்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும்.
மகரம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.
கும்பம்: குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும். பணவரவு திருப்தி தரும்.
மீனம்: விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT