Published : 18 Feb 2020 09:40 AM
Last Updated : 18 Feb 2020 09:40 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடைபட்டுவந்த காரியங்கள் எல்லாம் இன்று சுமுகமாக நிறைவேறும். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீடு, மனை வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்.

ரிஷபம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ உத்தரவாதமோ தரவேண்டாம். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

கடகம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினையை தீர்க்க மாற்றுவழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.

துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். நவீன மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: எதிலும் நிதானம் தேவை. பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவது மனசஞ்சலத்தை ஏற்படுத்தும். உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

மகரம்: உடல்நிலை சீராக இருக்கும். உறவினர்களின் திடீர் வருகையால் வீடு கலகலப்பாகும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிப்பீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்: வீண் செலவுகளை தவிர்த்து சேமிக்கும் எண்ணம் வரும். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x