Published : 28 Jan 2020 09:36 AM
Last Updated : 28 Jan 2020 09:36 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வீடு, மனை வாங்குவீர்கள். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

ரிஷபம்: சாதுர்யமாக செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும்.

மிதுனம்: அனுபவ அறிவால் சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.

கடகம்: சிறுசிறு அவமானம், வீண் விரையம் வந்து போகும். யாருக்காகவும் சாட்சி, ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவாக பழகுங்கள்.

சிம்மம்: மனோபலம் அதிகரிக்கும். நண்பர்கள். உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.

கன்னி: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

துலாம்: சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்.

விருச்சிகம்: நிர்வாகத் திறன் கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் அடிமனதில் இருக்கும் பயத்தை போக்குவீர்கள்.

தனுசு: வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். நவீன சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்று மொழிக்காரர்கள் அறிமுகமாவார்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

மகரம்: பேச்சில் கனிவு பிறக்கும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

கும்பம்: நண்பர்களுடன் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மீனம்: வீண் சந்தேகம், மறைமுக எதிர்ப்பு வந்து நீங்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x