Published : 26 Jan 2020 10:04 AM
Last Updated : 26 Jan 2020 10:04 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிரிகளை சாமர்த்தியமாக வீழ்த்துவீர்கள். வழக்குகள் சாதகமாகும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள்.

ரிஷபம்: வீடு, மனை வாங்குவதற்கான சூழல் கனிந்து வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை நம்பிக்கையைத் தரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: பெற்றோரின் உடல் நிலை திடீரென பாதிக்கக் கூடும். காரியங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும்.

கடகம்: மனதில் நிலவிய குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். போட்டி, விவாதங்களில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

கன்னி: வீடு வாங்கும் யோகம் உண்டாகும். தடைபட்டிருந்த வீடு கட்டுமானப் பணிகள் வேகம் எடுக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். சாதுர்யமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள்.

துலாம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழி உறவினரால் ஆதாயம் உண்டு.

தனுசு: வீடு கட்டுவது நல்ல விதத்தில் முடிவடையும். நவரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

மகரம்: உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. முடிந்துபோன சம்பவங்களைப் பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்காதீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

கும்பம்: பயணங்கள், தூக்கமின்மை, வீண் செலவுகள் ஏற்படக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த செய்தி வந்து சேரும்.

மீனம்: உயர் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மனைவிவழி உறவினர்களால் உதவி கிடைக்கும். நீண்டநாட்களாக விலகியிருந்த சொந்தபந்தங்கள் திரும்பி வருவார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x