Published : 22 Jan 2020 09:34 AM
Last Updated : 22 Jan 2020 09:34 AM
மேஷம்: தொலைநோக்கு சிந்தனை அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள்.
ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாக செய்துமுடிப்பீர்கள். அடுத்தடுத்து செலவுகள் வந்தாலும் அதற்கேற்ப வருமானம் வரும். அக்கம்பக்கத்தினரின் அன்பு தொல்லை உண்டு.
மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்குரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.
கடகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். விஐபி.களின் உதவியுடன் சில காரியங்கள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும்.
சிம்மம்: பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். உங்கள் ஆலோசனையை குடும்பத்தில் அனைவரும் ஏற்பார்கள். மகளின் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை நம்பிக்கை தரும்.
கன்னி: கவுரவப் பதவி தேடிவரும். மனைவிவழி உறவினர்களால் காரியங்கள் நிறைவேறும். புது வேலை அமையும். நீண்டநாட்களாக விலகியிருந்த சொந்தபந்தங்கள் திரும்பி வருவார்கள்.
துலாம்: சாதுர்யமாகச் செயல்பட்டு சவாலான காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். தடை, தாமதங்கள் நீங்கும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
விருச்சிகம்: கடனாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.
தனுசு: வேலைச்சுமையால் ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தினர் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.
மகரம்: குடும்பத்தில் சுபச்செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும். பால்ய நண்பர் தக்க சமயத்தில் உதவுவார். பணவரவு திருப்தி தரும்.
கும்பம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும் மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்: உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் பளிச்சிடும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் உத்தியோகம் அமையும். திடீர் பயணம் உண்டு.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT