Published : 08 Jan 2020 09:57 AM
Last Updated : 08 Jan 2020 09:57 AM
மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தினரின் விருப்பத்துக்கேற்ப ஆடை, ஆபரணங்கள், கலைப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது கோபப்படுவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடும். வாகனச் செலவு எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும்.
மிதுனம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். குடும்பத்துக்குள் சின்ன சின்ன சச்சரவுகள் வரக்கூடும். திடீர் பயணம் உண்டு.
கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். செல்லும் இடமெல்லாம் சிறப்பு கூடும். பயணங்கள் இனிதாக இருக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
சிம்மம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்டகால பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்..
கன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். வருமானம் உயரும். எதிர்பாராத இடத்தில் இருந்து தொகை வந்து ஆச்சரியப்படுத்தும்.
துலாம்: பிள்ளைகளுடன் வாக்குவாதம் வரும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
விருச்சிகம்: கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.
தனுசு: அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருந்துவந்த மோதல் போக்கு நீங்கும். சகோதரர்களுடன் மனம்விட்டு பேசி நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். ஆன்மிக பயணம் ஏற்படும்.
மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். வாகனம் சரியாகும். தைரியமாக, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
கும்பம்: மனக்குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவதற்கான முயற்சிகள் சாதகமாக முடியும்.
மீனம்: ஆடை, அணிகலன் சேரும். கல்யாண பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். திடீர் பணவரவு உண்டு.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT