Published : 23 Dec 2019 02:38 PM
Last Updated : 23 Dec 2019 02:38 PM
ஜோதிடர் ஜெயம் சரவணன்
திருவோணம் -
பணம் சம்பந்தப்பட்ட தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் இருந்தாலும் அதை சாதுரியமாக கையாளுவீர்கள். இடமாற்றம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். திருமண முயற்சிகள் கைகூடும்.
உத்தியோகம் -
வேலையில் எந்த பிரச்சினைகளும் இருக்காது. ஒருசில பிரச்சினைகள் வந்தாலும் அதையும் எளிதாக சமாளித்து விடுவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு இன்னும் சில வாரங்கள் தள்ளிப்போகும். அரசு ஊழியர்கள் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடைகள் வணிக நிறுவனங்கள் பணிபுரிபவர்களுக்கு வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றியாகும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல், எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். முதலீடுகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். கூட்டுத்தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். நிதி சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் உன்னதமான வளர்ச்சியைக் காண்பார்கள். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் தங்கள் தொழிலில் உன்னதமான முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரிகள் கிளைகள் தொடங்குவதும் தங்கள் வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவதும் நிறைவேறும்.
பெண்களுக்கு -
இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். சொந்த வீடு கனவு நனவாகும். வேலை இல்லாத பெண்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. சகோதரர்கள் பரிசு கொடுப்பார்கள்.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. அதிலும் உயர்கல்வி மாணவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி கல்வியில் ஏற்படும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
தேடித் தேடி வாய்ப்புகள் கேட்டுக்கொண்டிருந்தீர்கள். இனி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இந்த வாரம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பணத் தேவைகள் பூர்த்தி ஆகும். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
பொதுப் பலன் -
வருமானம் திருப்திகரமாக இருக்கும் . செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விடுங்கள். தாயாரின் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. ஒருசிலருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை, மற்றும் சிறுநீரகத் தோற்று போன்ற பிரச்சினைகள் வரலாம்.
இந்த வாரம் -
திங்கள் -
சொத்து சேர்க்கை சம்பந்தமான விஷயங்கள் எதிர்பார்த்தது போலவே நடக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும்.
செவ்வாய் -
வாகனச் செலவு அல்லது வாகனம் மாற்றும் சிந்தனை போன்றவை ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் இருக்கும்.
புதன் -
எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் இன்று இனிதாக முடியும். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை தீரும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.
வியாழன் -
வீண் அலைச்சல்கள் ஏற்படும். தொலைதூர பயணம் ஏற்படும், ஆனால் ஆதாயம் இருக்காது. எனவே பயணத்தை தவிர்த்து விடுங்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.
வெள்ளி -
நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தேவையான பண வரவு உண்டு. எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் நிறைவேறும். லாபகரமான நாள்.
சனி-
வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தை தரும். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து ஒப்பந்தமாக மாறும்.
ஞாயிறு -
திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் பேசி முடிக்கப்படும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்படும். அதனால் லாபம் கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து லாபம் கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
திருமலை திருப்பதி சீனிவாச பெருமாளை வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன்கள் முற்றிலுமாக தீரும்.
****************************************************************
அவிட்டம் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் லாபகரமாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிதாக தொழில் தொடங்கும் சிந்தனை உருவாகும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.
உத்தியோகம் -
பணியில் பெரிய மாறுதல்கள் எதுவும் இருக்காது. பதவி உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி சாதகமாக இருக்கும். ஒரு சிலருக்கு நிறுவனத்தின் சார்பில் வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு பணியில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. இயல்பான நிலையே தொடரும். உங்கள் வணிக நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு இரட்டிப்பு ஊதிய உயர்வு கிடைக்கும்.
தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். உற்பத்தியான பொருட்கள் விறுவிறுப்பாக விற்பனையாகும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொழில் தொடர்பான முதலீடுகள் இந்த வாரம் கிடைக்கும். கூட்டுத்தொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். பங்குவர்த்தகத்தில் இருப்பவர்கள் அதிக லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு எதிர்பாராத அளவுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும், லாபம் அதிகரிக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் பெரிய வளர்ச்சியைக் காண்பார்கள். புதிய வியாபாரங்களைத் தொடங்குவார்கள். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு சற்றும் எதிர்பாராத அளவுக்கு வியாபாரம் அதிக அளவில் ஏற்படும்.
பெண்களுக்கு -
சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். தந்தைவழி சொத்துக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். சுயதொழில் தொடங்கும் பெண்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நீங்களே எதிர்பாராத அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் கல்வியின் முன்னேற்றத்தைப் பார்த்து பெற்றோர்கள் மகிழ்வார்கள்.
கலைஞர்களுக்கு -
பலவித ஒப்பந்தங்கள் தேடி வரும். எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வரும் அளவுக்கு இருக்கும்.பெரிய அளவிலான பணவரவு இருக்கும்.
பொதுப்பலன் -
அதிக வருமானம் இருப்பதால் சேமிப்புகள் செய்ய வேண்டும். முதலீடுகளில் ஆர்வம் காட்ட வேண்டும். அசையாச் சொத்துக்கள் வாங்க வேண்டும். ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் இருக்காது. ஆடம்பரச் செலவுகளை குறைக்க வேண்டும்.
இந்த வாரம் -
திங்கள் -
கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒன்றைப் பேசி முடிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும். சிக்கனமாக இருக்கவேண்டும்.
செவ்வாய் -
பூமி சம்பந்தப்பட்ட வியாபாரம் திருப்திகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்த வேலைகள் அனைத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள்.
புதன் -
முக்கியமான சந்திப்புகள் தள்ளிப்போகலாம். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே போகும். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும்.
வியாழன் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் ஒன்று உருவாகும். மனக்குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்.
வெள்ளி -
ஒரு சில விஷயங்கள் சாதகமாக இருக்கும். பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போகும். அலுவலகத்தில் நீங்கள் முடித்து வைத்த வேலையை மீண்டும் சரிபார்க்க வேண்டியது வரும்.
சனி-
வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
ஞாயிறு -
திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சு வார்த்தைகள் பேசி முடிப்பீர்கள். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்று பேசி முடிக்கப்படும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
முருகப்பெருமானை வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். குழப்பங்கள் தீரும். ஆதாயம் பெருகும்.
*************************************************************
சதயம் -
நல்ல பலன்கள் நடைபெறும் வாரம் .எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்த மாதிரியே நடக்கும். ஆதாயம் தரும் வியாபாரங்கள் வெற்றியாகும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும்.
உத்தியோகம்-
பணியிடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்கு மதிப்பு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு இந்த வாரம் கிடைக்கலாம். வேறு நல்ல நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பணியில் பெரிய பிரச்சினைகளோ அல்லது மாறுதல்களோ இருக்காது. கடைகள் மற்றும் சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றி தரும்.
தொழில் -
தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். புதிய கிளைகளைத் துவங்குவார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.
பெண்களுக்கு -
அசையாச் சொத்து வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்து பாகப்பிரிவினைகளில் சகோதரர்கள் விட்டுக் கொடுப்பார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும்.இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் முயற்சியில் இருப்பவர்கள் இந்த வாரம் சுயதொழில் தொடங்குவதற்கான அத்தனை வாய்ப்புகளும் உண்டு.
மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி மாணவர்கள் தங்களுடைய அடுத்த இலக்கை நோக்கிப் பயணிப்பார்கள். அதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
இசை மற்றும் நாட்டியக் கலைஞர்களுக்கு வெளிநாடு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள் கிடைக்கும். ஊடகத்தில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனத்திற்கு பதவி உயர்வோடு மாறுவார்கள். ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
பொதுப்பலன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம் . உங்களுடைய முக்கியத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். எதிர்கால நலன் கருதி சேமிப்புகளைத் தொடங்குங்கள். செலவுகள் இருந்தாலும் அதற்கேற்ற வருமானம் இருந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகளோ அல்லது பாதிப்புகளோ ஏதும் இல்லை.
இந்த வாரம் -
திங்கள் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். திட்டமிடாத காரியங்களும் நடந்தேறும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சொத்து வாங்கும் எண்ணம் உருவாகும். அதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
செவ்வாய் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே போகும். ஒரு சில ஆதாயங்கள் தாமதமாக கிடைக்கும். செலவுகள் இருமடங்காக ஏற்படும்.
புதன் -
சொந்த வீடு வாங்குவது சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான முதலீடுகள் இன்று கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.
வியாழன் -
நண்பர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் செலவுகள் செய்ய வேண்டியது வரும். ஆடம்பரச் செலவுகள் ஏற்படும்.
வெள்ளி -
கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகளும் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
சனி-
தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எனவே பயணங்களைத் தள்ளி வையுங்கள். பேச்சுவார்த்தை ஏதும் இருந்தால் அதையும் ஒத்தி வையுங்கள். சிறிய அளவிலான மருத்துவச் செலவு ஏற்படும்.
ஞாயிறு -
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பண உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பான முக்கியமான சந்திப்பு இன்று ஏற்படும். அதனால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீமகாலட்சுமி தாயாருக்கு வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து நெய் தீபமேற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். முக்கிய பிரச்சினைகள் தீரும்.
*****************************************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT