Published : 23 Dec 2019 09:54 AM
Last Updated : 23 Dec 2019 09:54 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். பழைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். மாலை முதல் எதிலும் நிதானத்துடன் செயல்படுங்கள்.

ரிஷபம்: உங்களது நடவடிக்கைகளில் புத்திசாலித்தனம் வெளிப் படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: பழைய நண்பர்கள் மூலம் சில காரியங்களை நிறை வேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும்.

சிம்மம்: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வருங்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

கன்னி: காரியத் தடை, தாமதங்கள் நீங்கும். எடுத்த காரியங்களை எப்பாடுபட்டாவது முடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள்.

துலாம்: எதிர்காலத்தைப் பற்றிய பயம் அடிக்கடி உண்டாகும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனியுங்கள். மாலை முதல் சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: வீண்செலவு, அலைச்சல் வரும். அக்கம்பக்கத்து வீட்டாரிடம் அளவுடன் பழகுங்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து விடுங்கள். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: எதிலும் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் இப்போது நிறைவேறுவதற்கான காலம் கனிந்து வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

மீனம்: மனப்போராட்டம், ஒருவித பயம் இருக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவது நல்லது. மாலை முதல் டென்ஷன் குறையும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x