Published : 06 Dec 2019 09:42 AM
Last Updated : 06 Dec 2019 09:42 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அடுத்தடுத்து ஏற்படும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டு. பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம்.

ரிஷபம்: வங்கிக் கடன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கக் கூடும். சகோதரி உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்.

சிம்மம்: எதிர்மறை விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து போகும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். முக்கிய காரியங்களில் நிதானமுடன் செயல்படுவது நல்லது.

கன்னி: மனோபலம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள். அடகு வைத்திருந்த நகையை மீட்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

துலாம்: பழைய நிலத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். இழுபறியாக இருந்துவந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவி, ஆலோசனை கிடைக்கும்.

விருச்சிகம்: வீட்டை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

மகரம்: வீடு கட்ட அரசு அனுமதி கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் நல்ல மனதை புரிந்து கொண்டு வலிய வந்து உதவுவார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். பணவரவு உண்டு.

கும்பம்: வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும். பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள்.

மீனம்: யாரையும் அநாவசியமாக பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் சந்தேகம், தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x