Published : 17 Nov 2019 09:31 AM
Last Updated : 17 Nov 2019 09:31 AM
மேஷம்: நினைத்ததை முடித்து காட்டுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
ரிஷபம்: மனசாட்சிப்படி செயல்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.
மிதுனம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். மாலை முதல் பிரச்சினைகள் விலகும்.
கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சிகள் வெற்றியாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.
கன்னி: உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். நெருங்கிய நண்பர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள்.
துலாம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். தடைபட்ட வேலைகள் முடியும். வாகனத்தை சீர்செய்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
விருச்சிகம்: காரியங்களை அவசரப்படாமல் தக்க சமயம் பார்த்து நிறைவேற்ற முற்படுங்கள்.. பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. மாலை முதல் தடைகள் விலகும்.
தனுசு: பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.
மகரம்: வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
கும்பம்: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் பயணம் உண்டாகும்.
மீனம்: நீண்டகாலக் கடனை தீர்க்கும் வழிகள் குறித்து யோசிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். கலைப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT