Published : 14 Nov 2019 09:38 AM
Last Updated : 14 Nov 2019 09:38 AM
மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். குடும்பத்தினரின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து மனம் சஞ்சலப்படுவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.
மிதுனம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். சுற்றத்தாரின் சுயரூபத்தையும் அறிந்து கொள்வீர்கள். குடும்பத்துக்குள் சின்ன சின்ன சச்சரவுகள் வரக்கூடும். திடீர் பயணம் உண்டு.
கடகம்: பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். செல்லும் இடமெல்லாம் சிறப்பு கூடும். குடும்பத்தினருடன் இன்பசுற்றுலா சென்று வருவீர்கள்.
சிம்மம்: அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்டகால பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி பிறக்கும்.
கன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மூத்த சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் வரும். மனதுக்கு இனிய சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறும்.
துலாம்: வாகனம் திடீரென செலவு வைக்கும். பிள்ளைகளுடன் வாக்குவாதம் ஏற்படக் கூடும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்: கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். உறவினர்கள் உங்களின் அணுகுமுறையை பாராட்டுவார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.
தனுசு: அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருந்த மோதல் போக்கு முடிக்கு வரும். சகோதரர்களுடன் மனம்விட்டு பேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுத்து வெற்றி பெறுவீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கும்பம்: மனக்குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
மீனம்: ஆடை, அணிகலன்கள் சேரும். கல்யாண பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT