Published : 04 Nov 2019 09:30 AM
Last Updated : 04 Nov 2019 09:30 AM
மேஷம்: குடும்பத்தினருடன் கலந்து பேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். விலகிச் சென்ற நண்பர்கள் உங்களை புரிந்துகொள்வார்கள்.
ரிஷபம்: வெளிப்படையாகப் பேசி சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் -மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் உண்டாகும்.
மிதுனம்: சிக்கனமாக இருக்க நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு உண்டாகும்.
கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டும் என்று நினைப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடம்பர செலவை தவிர்ப்பீர்கள்.
சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் திருமண முயற்சி பலிதமாகும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள்.
கன்னி: புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பேச்சில் கவனம் தேவை.
துலாம்: மகிழ்ச்சி, உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு, வங்கி காரியங்களில் ஆதாயம், லாபம் உண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
விருச்சிகம்: வெகுநாளாக மனதை வருத்திய பிரச்சினைக்கு முடிவு கட்டுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவு பெருகும். கணவன் - மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். எதிலும் நிதானம் அவசியம்.
தனுசு: மனநிறைவு, நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும் பத்தில் அனுசரித்துச் செல்வீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு.
மகரம்: பல வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்கவேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். முக்கிய நபரை சந்திப்பீர்கள். வாகன வகையில் வீண் செலவு, அலைச்சல் ஏற்படும்.
கும்பம்: வீண், ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.
மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு, வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT