Published : 31 Oct 2019 09:26 AM
Last Updated : 31 Oct 2019 09:26 AM
மேஷம்: முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடுங்கள். சகோதரர் வகையில் அலைச்சல், செலவு இருக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். திடீர் பயணம் உண்டு.
ரிஷபம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். கலை, இசையில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைப்பொருட்கள் சேரும்.
மிதுனம்: சவால்கள், எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இழுபறியாக இருந்த சில காரியங்களை முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டு.
கடகம்: எதிர்காலத்துக்கென புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிரபலங்களின் துணையுடன் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். கடனை பைசல் செய்வதற்கான வழி பிறக்கும்.
சிம்மம்: தடைபட்ட வேலைகள் முழுமையடையும். பால்ய நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும்.
கன்னி: தன்னம்பிக்கை மனதில் துளிர்விடும். தைரியமான முடிவுகள் எடுத்து வெற்றி காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பார்கள். கலைப்பொருட்கள் சேரும்.
துலாம்: எதிர்காலத் திட்டங்களைப் பற்றி யோசிப்பீர்கள். வரவேண்டிய இடத்திலிருந்து பணம் வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். பிள்ளைகளால் திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்படக் கூடும்.
தனுசு: குடும்ப ரகசியங்களை வெளி நபர்களுடன் பகிர வேண்டாம். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள்.
மகரம்: பணப்பற்றாக்குறை நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் திடமான முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் திறமைகளை ஊக்குவிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் தீரும். வாகனம் செலவு வைக்கும்.
மீனம்: சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த சொத்து பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT