Published : 17 Oct 2019 09:46 AM
Last Updated : 17 Oct 2019 09:46 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அநாவசிய செலவுகளைக் குறைத்து சேமிக்கத் திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். உதவி கேட்டு சொந்தபந்தங்கள் தொந்தரவு தருவார்கள்.

மிதுனம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள்கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

கடகம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

சிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புண்ணிய தலங்கள் செல்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கன்னி: சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

துலாம்: முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர வேண்டாம். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பயணம் உண்டு.

விருச்சிகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பாசத்துடன் நடந்து கொள்வார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

தனுசு: உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்: உங்களின் நீண்டகாலக் கனவு நனவாகும். பழைய உறவினர்கள் தேடிவந்து பேசுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கும்பம்: தாய்வழி உறவினர்களால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். சமூகத்தில் பிரபலமானவர்களுடன் திடீர் சந்திப்பு நிகழும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

மீனம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதி பெருகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x