Published : 16 Oct 2019 09:44 AM
Last Updated : 16 Oct 2019 09:44 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அளவாகப் பழகுங்கள். எதிலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது.

ரிஷபம்: எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக முடியும். திடீர் பயணங்களும், செலவுகளும் ஏற்படக் கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மிதுனம்: நினைத்த காரியங்கள் தடங்கலின்றி நிறைவேறும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி ஏற்படும்.

கடகம்: எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. உயர் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரக்கூடும். மற்றவர்களை குறைகூறிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

துலாம்: ஆடை, ஆபரணங்கள் சேரும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். காரியங்களில் நிதானமுடன் செயல்பட்டு வெற்றிபெறுவீர்கள்.

விருச்சிகம்: பழைய பிரச்சினைகள், சிக்கல்களுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள்.

தனுசு: இழுபறியாக இருந்த வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். வழக்கு சாதகமாகும். வீடு வாங்குவது குறித்த ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.

கும்பம்: உங்கள் செயலில் வேகம் கூடும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பிள்ளைகளின் வேலை சம்பந்தமாக முக்கிய பிரமுகரைச் சந்திப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: பேச்சில் சாதுர்யம் பளிச்சிடும். சொத்துத் தகராறு தீரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x