Published : 25 Sep 2019 11:31 AM
Last Updated : 25 Sep 2019 11:31 AM
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கிரகநிலை:
குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு ஒன்பதாவது நட்சத்திரத்தில் இருந்து பத்தாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.
பலன்:
பார்த்தால் கடுமையானவர் போல் தோற்றமளிக்கும் மகம் நட்சத்திர அன்பர்களே.
நீங்கள் பழகினால் இனிமையானவர். எதிலும் சரியாக செயல்படுபவர். இந்த குருப் பெயர்ச்சியால் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாகப் பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை.
குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்க்கவும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மன வருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கை தேவை.
பெண்களுக்கு : கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும்.
கலைத்துறையினருக்கு : நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு : நற்பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள்.
மாணவர்களுக்கு : திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
மதிப்பெண்கள்: 74% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
+: முயற்சிகள் வெற்றியைத் தரும்
-: பணிகளில் தாமதம் ஏற்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT