Published : 24 Sep 2019 08:50 AM
Last Updated : 24 Sep 2019 08:50 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் சிலர் உங்களின் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுவார்கள். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள்.

ரிஷபம்: எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். மனோபலம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணவரவு உண்டு.

மிதுனம்: சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சமயோசிதமாகப் பேசி பாராட்டு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

கடகம்: தர்மசங்கடமான சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். நண்பர்களால் எதிர்பாராத பிரச்சினைகள் வந்து போகும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் தலையிடாமல் இருப்பது நல்லது.

சிம்மம்: எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பழைய நகையை மாற்றி புதிய நகை வாங்குவீர்கள். வாகனம், வீடு பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

கன்னி: மனதில் தைரியம் பிறக்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். அலைச்சல் குறையும். வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு.

துலாம்: பேச்சில் கம்பீரம் தெரியும். வீண் செலவுகளை குறைக்கத் திட்டமிடுவீர்கள். சமூகத்தில் பெரிய மனிதர்களின் உதவியால் காரியங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குலதெய்வக் கோயில் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு: பழைய கடன் பற்றிய கவலை, வீண் பயம் அவ்வப்போது மனதை வாட்டும். சின்னச் சின்ன உடல்நலக் குறைவுகள் ஏற்படலாம்.. யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

மகரம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களில் சிலர் உங்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: நினைத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதியைத் தரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x