Published : 01 Apr 2025 03:12 PM
Last Updated : 01 Apr 2025 03:12 PM
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன் , சனி - தொழில் ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), சூரியன் - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்: 07-04-2025 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 10-04-2025 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14-04-2025 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று கேது பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-04-2025 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: சாமர்த்திய மிதுனம் என்பதற்கேற்ப நன்றாக சிந்தித்து நல்ல யோசனைகளால் மற்றவர் மனம் நோகாமல் சாமர்த்தியமாக பேசி சமாளிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி அன்பர்களே... இந்த மாதம் செயல்படாமல் முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்து விடும். உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவிக்கரம் முழு காரணமாக இருச்கும். பொருளாதாரத்தில் உயர்வு உண்டாகும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூல பயன்கள் உண்டாகும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி உண்டு சிறிது பொறாமைப்படுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்வீர்கள். தொழிலதிபர்கள் தங்கநகைகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்கள், ரத்தினகற்கள் விற்பனையாளர்கள் புதிய வாடிக்கையாளர்களை நிரம்ப பெற்று நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
பெண்கள் அரசுத்துறை மற்றும் தனியார்துறையில் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். திருமணம் ஆன பெண்கள் புத்திரதோஷம் அமைப்பிற்குள் வருவதால் உரிய முறையில் பரிகாரம் செய்வது சிறந்தது. கலைத்துறையினர் தொழில் வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து வீடு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். கலைஞர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறுதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவர்.
அரசியல்வாதிகள் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தர எடுக்கும் முயற்சிகளோடு தங்கள் வாழ்க்கைக்கு தேவையான சுகசவுகரியங்களைப் பெற வேண்டிய ஏற்பாடுகளையும் செயல்படுத்துவீர்கள். உங்கள் கோரிக்கைகள் முக்கியமானதாகக் கருதப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்படும்.
மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்ப மாணவர்களும் ஆரம்ப நிலை மாணவர்களும் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர். வக்கீல் தொழிலில் ஜூனியராக இருந்து பயிற்சி பெறும் மாணவர்கள் தகுந்த சமயத்தில் சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.
திருவாதிரை: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.
புனர்பூசம்1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.
பரிகாரம்: முடிந்தவரை புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 21, 22 | அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment