Published : 30 Mar 2025 03:02 PM
Last Updated : 30 Mar 2025 03:02 PM
சனி பகவான் 29.03.2025 சனிக்கிழமை இரவு 9 மணி 44 நிமிடத்துக்கு கும்ப ராசியிலிருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். 12 ராசிகளுக்கான ஒரு வரி பலன்கள் இதோ...
மேஷம்: இந்த சனி மாற்றம் பழைய பிரச்சினைகளில் இருந்து விடுபட வைப்பதாகவும், அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாகவும் அமையும்.
ரிஷபம்: இந்தச் சனிப்பெயர்ச்சி திக்குத் திசையறியாது தவித்துக் கொண்டிருந்த உங்கள் வாழ்வில் திடீர் திருப்பத்தையும், புதிய அத்தியாயத்தையும் தொடங்கி வைப்பதாக அமையும்.
மிதுனம்: இந்த சனி மாற்றம் குடத்தில் இட்ட விளக்காய் இருந்த உங்களை கோபுர விளக்காய் ஒளிர வைக்கும்.
கடகம்: இந்த சனி மாற்றம் உங்களை தலை நிமிர வைப்பதுடன், நீண்ட நாள் விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.
சிம்மம்: இந்த சனி மாற்றம் பிரச்சினைகளிலும், செலவுகளிலும் சிக்க வைத்தாலும் கூட, கடின உழைப்பாலும் சமயோஜித புத்தியாலும் இலக்கை எட்டி பிடிக்க வைக்கும்.
கன்னி: இந்த சனி மாற்றம் சில நேரங்களில் உங்களை சூழ்நிலை கைதியாக மாற்றினாலும் அனுபவ அறிவால் பிரச்சினைகளை சமாளித்து சாதிக்க வைக்கும்.
துலாம்: இந்தச் சனிப்பெயர்ச்சி குழப்பங்கள், தடுமாற்றங்களில் இருந்து விடுவிப்பதுடன் வெளிவட்டாரத்தில் செல்வாக்கையும் தருவதாக அமையும்.
விருச்சிகம்: இந்த சனி மாற்றம் வேலைச்சுமையையும். செலவுகளையும் அவ்வப்போது தந்து அலைக்கழித்தாலும் தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றி பெறவைக்கும்.
தனுசு: இந்த சனிப் பெயர்ச்சி எங்கும் எதிலும் முன்னேற்றத்தையும், எதிர்பாராத திடீர் யோகங்களையும் தருவதாக அமையும்.
மகரம்: இந்த சனி மாற்றம் எல்லாவற்றையும் இழந்து தவித்துக் கொண்டிருந்த உங்களை ஆடம்பரமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும்.
கும்பம்: இந்த சனி மாற்றம் கொஞ்சம் அலைச்சல், செலவுகளை தந்தாலும், உங்களை முன்னேற்றப் பாதைக்கும் அழைத்துச் செல்லும்.
மீனம்: இந்த சனி மாற்றம் இழப்பு, எதிர்ப்பு, ஏமாற்றங்களிலிருந்து விடுவிப்பதுடன், ஓரளவு வருமானம், வசதிகளை தரும்.
ராசி வாரியாக சனிப்பெயர்ச்சி பலன்கள் > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி |துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment