Published : 22 Mar 2025 05:40 AM
Last Updated : 22 Mar 2025 05:40 AM
மேஷம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகு முறையால் முடிப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
ரிஷபம்: திட்டமிட்ட வேலையை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகரீதியான பயணங்கள் திருப்தி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர். பணவரவு உண்டு. வியாபார சங்கத்தில் முக்கிய பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டு பெறுவீர்கள்.
கடகம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய பிரமுகர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும்.
கன்னி: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். தியானத்தில் மனம் செல்லும். அலுவலகரீதியான பயணங்கள் திருப்தி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.
துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் யோசித்து பழகவும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிவரும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்ப்பீர்கள்.
விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். புதிய பங்குதாரர்கள் கிடைப்பர்.
தனுசு: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கவும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.
மகரம்: பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
கும்பம்: வேற்று மொழி, மதத்தினர்களால் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். வியாபாரம் லாபம் தரும்.
மீனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்றுமொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். புதிய பங்குதாரரின் உதவியுடன் வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment