Last Updated : 18 Mar, 2025 06:26 PM

 

Published : 18 Mar 2025 06:26 PM
Last Updated : 18 Mar 2025 06:26 PM

சனிப்பெயர்ச்சி பொதுப் பலன்கள் 2025 - 2027 | சனி பயோடேட்டா + பரிகாரங்கள்

நவக்கிரகங்களில் கர்ம கிரகம் - தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்ல விஷயங்களையும் அளிப்பவர் - சூரியனின் மகன் மந்தன் என்று சனி பகவான் அழைக்கப்படுகிறார். சனி கிரகம் மட்டுமே ஈஸ்வர பட்டம் ஒரே கிரகம். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக் கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் தலைவர். நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் - ஆயுள், தொழில், கர்மா. இம்மூன்றிக்கும் அதிபதி அதாவது காரகன் சனியே ஆவார். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும் சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம்.

சனி பகவானுக்குரிய ஆதிக்கம் பெற்ற விஷயங்கள்: உழைப்பு, சமூக நலம், தேச தொண்டு, புதையல், தலைமை தாங்கும் வாய்ப்பு, உலகியல் அறிவு, பல மொழிகளில் பாண்டித்யம், விஞ்ஞானத்தில் தேர்ச்சி, எண்ணைக் கிணறு, பெரிய இயந்திரங்கள் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொடுப்பவர். கிரக வரிசையில் ஆறாவதாக வருபவர். கிழமைகளில் சனிக்கிழமைக்கு ஆதிக்கம் செலுத்துபவர். அளவின் அடிப்படையில் குருவிற்கு அடுத்த பெரிய கிரகம் சனி கிரகமாகும்.

சனியின் பலம்: குருவிற்கு பார்வை பலமும் சனிக்கு ஸ்தான பலமும் சொல்லப்பட்டிருக்கிறது. சனி எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் சிறிது காலத்திற்குப் பிறகு பலமும், விருத்தியும் அடைகிறது. சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது சனி இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

நிகழும் மங்களகரமான கலியுகாதி 5125 - சாலிவாகன சகாப்தம் 1946 - பசலி 1434 - கொல்லம் 1200 ம் ஆண்டு ஸ்வஸ்தி ஸ்ரீகுரோதி வருடம் உத்தராயனம் சிசிர ரிது பங்குனி மாதம் 15ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 29.03.2025 சுக்ல பிரதமையும் சனிக்கிழமையும் ரேவதி நக்ஷத்ரமும் பிராம்ம நாமயோகமும் பவ கரணமும் அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42:06 க்கு - இரவு 11:01 க்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.

மீன ராசிக்கு வரும் சனி பகவான் மேஷ ராசிக்கு ஸ்ரீபிலவங்க வருடம் வைகாசி மாதம் 20ம் தேதி - 03.06.2027 - வியாழக்கிழமையன்று உதயாதி நாழிகை 01:34க்கு - காலை மணி 06:23 க்கு மாறுகிறார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும் - ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும் - பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம்.

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:
நன்மை பெறும் ராசிகள்: மிதுனம் - கடகம் - துலாம் - மகரம்
நன்மை, தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: ரிஷபம் விருச்சிகம்
பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மேஷம் - சிம்மம் - கன்னி - தனுசு - கும்பம் - மீனம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை அறிய > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு| மகரம | கும்பம் | மீனம்

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

தேதி கிழமை நக்ஷத்ர பாதம் நிலை ராசி அம்சம்
29.03.2025 சனிக்கிழமை பூரட்டாதி 04 நேர் மீனம்கற்கடகம்
28.04.2025 திங்கட்கிழமை உத்திரட்டாதி 01 நேர் மீனம்சிம்மம்
07.06.2025 சனிக்கிழமை உத்திரட்டாதி 02 நேர் மீனம்கன்னி
18.08.2025 திங்கட்கிழமை உத்திரட்டாதி 01 வக்ரம் மீனம்சிம்மம்
03.10.2025 வெள்ளிக்கிழமை பூரட்டாதி 04 வக்ரம் மீனம்கற்கடகம்
20.01.2026 செவ்வாய்கிழமை உத்திரட்டாதி 01 நேர் மீனம்சிம்மம்
22.02.2026 ஞாயிற்றுக்கிழமை உத்திரட்டாதி 02 நேர் மீனம்கன்னி
21.03.2026 சனிக்கிழமை உத்திரட்டாதி 03 நேர் மீனம்துலாம்
17.04.2026 வெள்ளிக்கிழமை உத்திரட்டாதி 04 நேர் மீனம்விருச்சிகம்
17.05.2026 ஞாயிற்றுக்கிழமை ரேவதி 01 நேர் மீனம்தனுசு
02.07.2026 வியாழக்கிழமை ரேவதி 02 நேர் மீனம்மகரம்
20.08.2026 வியாழக்கிழமை ரேவதி 01 வக்ரம் மீனம்தனுசு
09.10.2026 வெள்ளிக்கிழமை உத்திரட்டாதி 04 வக்ரம் மீனம்விருச்சிகம்
08.02.2027 திங்கட்கிழமை ரேவதி 01 நேர் மீனம்தனுசு
11.03.2027 வியாழக்கிழமை ரேவதி 02 நேர் மீனம்மகரம்
07.04.2027 புதன்கிழமை ரேவதி 03 நேர் மீனம்கும்பம்
04.05.2027 செவ்வாய்கிழமை ரேவதி 04 நேர் மீனம்மீனம்
03.06.2027 வியாழக்கிழமை அஸ்வினி 01 நேர் மேஷம்மேஷம்

சனி பயோடேட்டா:
சொந்த வீடு - மகரம், கும்பம்
உச்சராசி - துலாம்
நீச்சராசி - மேஷம்
குணம் - குரூரம்
மலர் - கருங்குவளை
ரத்தினம் - நீலம்
கிரக லிங்கம் - அலி
வடிவம் - நெடியர்
பாஷை - அன்னிய பாஷை
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - 2.5 வருடம்
வஸ்திரம் - கருப்பு பட்டு
க்‌ஷேத்திரம் - திருநள்ளாறு, திருக்குளந்தை (பெருங்குளம்), சனிசிக்னாபூர், தனி விநாயகர் மற்றும் ஆஞ்சநேய ஸ்வாமி கோவில்கள்
ஆசனம் - வில் அம்பு
ஸமித்து (ஹோமக் குச்சி) - வன்னி
நைவேத்தியம் - எள்ளு சாதம் (இனிப்பு அல்லது காரம்)
தேவதை - மிருத்யு, சிலர் எமன் என்பர்
பிரத்யதி தேவதை - திருமுக்தி, பிரஜாபதி
திசை - மேற்கு
வாகனம் - காக்கை சிலர் கழுகையும் சொல்கின்றனர்.
தானியம் - எள்
வஸ்து - எண்ணைய் அதிலும் நல்லெண்ணெய்
உலோகம் - இரும்பு
கிழமை - சனிக்கிழமை
பிணி - வாதம்
சுவை - கைப்பு
நட்பு கிரகங்கள் - புதன், தேய்பிறை சந்திரன், சுக்கிரன்
பகை கிரகங்கள் - சூரியன், வளர்பிறை சந்திரன், செவ்வாய்
சம கிரகங்கள் - குரு (வியாழன்)
காரகம் - ஆயுள்
தேக உறுப்பு - தொடையிலிருந்து கால்கள் வரை
நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
திசை வருடம் - 19 ஆண்டுகள்
மனைவி - நீளாதேவி
உபகிரகம் - மாந்தி

ஒவ்வொரு ராசியிலும் சனியின் நிலை:

நட்சத்திரம் சனியின் நிலை
மேஷம் நீசம்
ரிஷபம் நட்பு
மிதுனம் நட்பு
கடகம் பகை
சிம்மம் பகை
கன்னி நட்பு
துலாம் உச்சம்
விருச்சிகம் பகை
தனுசு நட்பு
மகரம் ஆட்சி
கும்பம் ஆட்சி
மீனம் நட்பு

ஒவ்வொரு கிரகத்துடனும் சனியின் நிலை:

கிரகம் - சனியின் நிலை
சூரியன் - பகை
சந்திரன் - பகை
செவ்வாய் - பகை
புதன் - நட்பு
குரு - சமம்
சுக்கிரன் - நட்பு

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை அறிய > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு| மகரம | கும்பம் | மீனம்

சனி காயத்ரீ மந்திரம்

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனைச்சர ப்ரசோதயாத்!

ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!


சனி ஸ்லோகம்

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்

சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!

அர்த்தம்: கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.

பொதுவான பரிகாரங்கள்:

> தினமும் விநாயகர் - ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

> தினமும் விநாயகர் அகவல் - ஹனுமன் சாலீசா - சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைப் பெற்று தரும். அடிக்கடி மஹாகணபதி ஹோமம் அல்லது பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்வதும் நிறைவான மாற்றத்தைக் கொடுக்கும்.

> தினமும் முன்னோர்கள் வழிபாட்டைச் செய்வது - குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது முன்னோர்களை வழிபடுவது பலம் சேர்க்கும்.

> தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

பொது பலன்கள்: குரு வீட்டிற்கு சனி மாறுவதால் சுப நிகழ்ச்சிகளில் மிகப் பெரிய தடை இருக்கும். திருமணம் சம்பந்தப்பட விஷயங்களில் தொய்வு ஏற்படும். ஆனால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். இடி மின்னல் அதிகம். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம்.

உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதேவேளையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும்.

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை அறிய > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு| மகரம | கும்பம் | மீனம்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x