Published : 15 Mar 2025 05:36 AM
Last Updated : 15 Mar 2025 05:36 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும். மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பர்.

ரிஷபம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மனவலிமையுடன் திட்டமிட்ட பணிகளை முடிப்பீர். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

மிதுனம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். முன்கோபம் விலகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

கடகம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் இடமாற்றம் உண்டு. மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

சிம்மம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர். உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு
சுமாராக இருக்கும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

துலாம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

விருச்சிகம்: மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். பிள்ளைகள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் பாக்கிகள் வந்து சேரும்.

தனுசு: பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மகரம்: முக்கியzபிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். திட்டமிட்ட வேலையை முடிக்க பாடுபடுவீர். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கும்பம்: தம்பதிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. விருந்தினர் வருகை, ஆடம்பர செலவுகளால் சேமிப்பு கரையும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். அலுவலக ரீதியான பயணங்கள் பயன் தரும். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x