Last Updated : 16 Jan, 2025 05:04 PM

 

Published : 16 Jan 2025 05:04 PM
Last Updated : 16 Jan 2025 05:04 PM

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜன.16 - 22

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 18.01.2025 அன்று செவ்வாய் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் புத்திக்கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மனவருத்தம் உண்டாகலாம், கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

அஸ்வினி: இந்த வாரம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.

பரணி: இந்த வாரம் வரவேண்டி இருந்தும் வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். புதிய வீடுவாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: முருகனை அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) - பஞ்சம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன்- தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 18.01.2025 அன்று செவ்வாய் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள்.

வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல்திறன் கூடும். மாணவர்களுக்கு பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். `

ரோகினி: இந்த வாரம் புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம்.

பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) - சுக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன்- பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 18.01.2025 அன்று செவ்வாய் ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

பயணங்கள் சாதகமான பலனை தரும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுத லாக உழைக்க வேண்டியது இருக்கும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பண விஷயத்தில் சிக்கனத்தை கடை பிடிப்பபீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

திருவாதிரை: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் திடீர் பிரச்சினை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சினைகள் தீரும். பண கஷ்டம் தீரும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon