Published : 10 Jan 2025 05:45 AM
Last Updated : 10 Jan 2025 05:45 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடுமாற்றங்கள் நீங்கும். எடுத்த காரியங்களை முடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

ரிஷபம்: அலைச்சலும், செலவுகளும் இருக்கும். நீங்கள் நல்லது சொல்ல போய் சிலர் தவறாக புரிந்து கொள்வர். உடல் நலத்திலும் கவனம் தேவை. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

மிதுனம்: எதிர்காலம் குறித்த பயம், கவலை விலகும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்.

கடகம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

சிம்மம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். தம்பதிக்குள் நிம்மதியுண்டு. பணவரவு அதிகரிக்கும். அலுவலகரீதியான பயணங்கள் திருப்தி தரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம்.

கன்னி: பழைய நினைவுகள் மகிழ்ச்சி தரும். குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பெறுவீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. உங்களை நம்பி பெரிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.

துலாம்: மறைமுக அவமானம் ஏற்படும். பழைய கடன் சுமையால் நிம்மதி இழப்பீர். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பீர். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

விருச்சிகம்: மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் சீராகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரரீதியாக சில முடிவுகள் எடுப்பீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

தனுசு: குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பீர். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

மகரம்: மனச்சோர்வு நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு.

மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x