Published : 08 Jan 2025 06:42 PM
Last Updated : 08 Jan 2025 06:42 PM
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய்(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்- அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 14.01.2025 அன்று சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் குடும்பத்தில் ஒற்றுமை கூடும். அரசாங்க அதிகாரிகளின் அனுகூலமான செயல்கள் உங்களுக்கு தேவையான சமயத்தில் கிடைக்கும். பூமி தொடர்பான விற்பனை தொழில் வாய்ப்புகளைப் பெற்றவர்கள் சுமாரான அளவில் லாபம் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் அரசுத்துறைகளில் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் சிலரது குறுக்கீடுகளின் காரணமாக சோர்வு மனப்பான்மைக்கு ஆளாவார்கள்.
வரும் காலங்களில் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கப்பெற்று தங்கள் பணியில் சிறந்து விளங்குவார்கள். தொழில்திபர்கள் தங்கள் நிறுவனத்தின் புகழை பரப்ப புதிய விளம்பர வியாபாரம் தொடர்பான வாகனங்கள் வைத்திருப்பாவர்கள், வாகன பராமரிப்புக்காக செலவு செய்ய வேண்டியது இருக்கும். பெண்கள் பணிச்சுமைகள் காரணமான மனக்குழப்பமும் துக்கமின்மையும் உண்டாகி பின்னர் சரியாகும்.
புத்திர பாக்கிய அமைப்பு அனுகூல நிலையில் உள்ளது. மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
புனர்பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.
பூசம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சினைகள் அதனால் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்று ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம்.
ஆயில்யம்: இந்த வாரம் வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து உங்கள் கடமைகளில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வழிபடுவது காரிய தடை களை நீக்கும். மன அமைதியை தரும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்- களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 14.01.2025 அன்று சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் ஆன்மீக உணர்வுடன் செய்த நற்செயல்கள் தகுந்த பலனைத்தரும். வீடு மனை வாகன வகைகள் புதியவை வாங்கவும் இருப்பவற்றை சீர்திருத்தம் செய்யவும் நல்வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியின் பொருட்டு பல்வேறு இடங்களுக்கு சென்று வர நேரலாம்.
மனதில் புதிய உற்சாகமும் பொருளாதார வரவுகள் எதிர்கால வாழ்க்கையை உயர்த்தும் வகையில் பலன்கள் நடக்கும். உங்கள் உத்தரவுக்கு கட்டுப்பட தயக்கம் காட்டிய ஊழியர்கள் கூட உங்கள் சொல்லை மதித்து நடக்கும் நிலைகள் உண்டாகும். பெண்கள் நிர்வாகத்திடமிருந்து தேவையான சலுகைகளைப் பெறுவார்கள். சேமிப்பு செய்து பணத்தை குடும்பத்தின் சுப செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள்.
குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் தங்கள் உறவினர்களிடம் அன்புடன் நடந்து கொள்வதால் உறவினர்களின் பாசப்பிணைப்பு குடும்ப மேன்மைக்கு உதவிக்கரமான இருக்கும். மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விச் செலவுக்கு தேவையான பொருளாதார தேவைகள் எளிதாகக் கிடைக்கும். நண்பர்களுடன் உரையாடுவதால் புதிய ஞானம் பிறக்கும். தெய்வ நம்பிக்கை பெருகுவதால் மனம் அமைதியாக இருக்கும்.
மகம்: இந்த வாரம் தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.
பூரம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சினையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும்.
பரிகாரம்: நவகிரகத்தில் சூரியனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூரியன் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்- ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - களத்திர ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 14.01.2025 அன்று சூரியன் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் சுபகாரிய செலவுகள் நிகழும். தைரியமான செயல்களைச் செய்து தகுந்த புகழை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்களுக்கு பல்வேறு விரய செலவுகள் வரலாம். அனைவரையும் அரவணைத்து வேலை வாங்கும் புதிய சிந்தனைகள் உருவாகும். புதிய செயல்திறன் பெற்று நிர்வாகத்திடமும் ஊழியர்களிடமும் நற்பெயர் பெறுவார்கள்.
வியாபாரிகள் எந்த வியாபாரம் செய்பவராக இருந்தாலும் அவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வீடு மனை வாகன யோகங்கள் சுமாரான பலனைத் தரும்.கடன் மற்றும் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரையமான செலவுகளைப் பற்றி மனதில் எதுவும் எண்ணாமல் நற்பலன்கள் முழுதும் பெற ஆயத்தமாகுங்கள்.
அரசு மற்றும் தனியார் துறைகளிளல் பணியாற்றும் பெண்கள் புதிய உத்வேத்துடன் செயல்பட்டு மன நிறைவு பெறுவார்கள். மாணவர்கள் சிறப்பாக படிப்பர். விளையாட்டுகளில் சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் புகழும் விருதும் பெறுவார்கள். மனம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் தெய்வ வழிபாடுகள் நல்வழிப்படுத்தும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை. எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும்.
அஸ்தம்: இந்த வாரம் தேவையற்ற மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம்.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT