Published : 26 Dec 2024 04:59 PM
Last Updated : 26 Dec 2024 04:59 PM
மிதுனம் வாக்குறுதி என்பது சத்தியத்துக்கும் மேலானது, என்பதை உணர்ந்தவர்களே! உங்கள் ராசிக்கு 7-வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வழக்கு சாதகமாகும்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 17.05.2025 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரியத் தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.
18.05.2025 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். உங்களுக்குள் ஒரு சுயக் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். எதிரி அடிக்கடி வாய்தா வாங்கியதால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் இனி சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால் ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும்.
இந்த ஆண்டு பிறப்பு முதல் 13.05.2025 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.
14.05.2025 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் ஆரோக்கியம் பாதிக்கும். பணிச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்து நீங்கும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். காய்ச்சல், யூரினரி இன்பெக் ஷன் வந்து செல்லும். வெளி உணவுகள், வாயுப் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில், தம்பதிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம்.
இந்தாண்டு தொடக்கத்தில் சனிபகவான் ராசிக்கு 9-ம் வீட்டில் தொடர்வதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். 29.03.2025 முதல் சனிபகவான் 10-ம் வீட்டில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் உத்தியோகத்தில் பணிச்சுமை, மறைமுக எதிர்ப்பு, ஏமாற்றம் வந்துபோகும்.
வியாபாரிகளே! இனி புதுப் புது திட்டங்களால் போட்டி யாளர்களை திணறடிப்பீர்கள். தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர் களை கவர சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். கொடுக்கல்-வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் இணைவார்கள்.
உத்தியோகஸ்தர்களே! உயர் அதிகாரிகளின் அன்பைப் பெறுவீர். சக ஊழியர்களால் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட அவல நிலை மாறும். எதிர்பார்த்த பதவியுயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இப்போது கிட்டும். கணினி துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும்.
இந்த 2025-ம் ஆண்டு வேலைச்சுமையையும், மனஅமைதியின்மையையும் தந்தாலும் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்த்துவதாக அமையும்.
பரிகாரம்: தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் சென்று அங்குள்ள வாராஹி அம்மனை வழிபடுங்கள். தென்னை மரக்கன்று நடுங்கள். வாய் பேச இயலாத மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். நல்ல பலன்கள் அதிகரிக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT